Homeகுற்றவியல்சீபில்ட் ஆலயம், ஒன் சிட்டி மையத்திற்கு போலீஸ் பாதுகாப்பு

சீபில்ட் ஆலயம், ஒன் சிட்டி மையத்திற்கு போலீஸ் பாதுகாப்பு

கோலாலம்பூர், டிச. 18
சுபாங் ஜெயா சீபில்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திற்கும் ஓன் சிட்டி வர்த்தக மையத்திற்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபட 392 போலீஸ்காரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

சீருடை அணியாத போலீஸ்காரர்களும் அவர்களில் அடங்குவர். ஒன் சிட்டி வர்த்தக மையத்திற்கு அருகே மத்திய போலீஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

யுஎஸ்ஜே 25 செல்லும் பாதைகளில் 3 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு வீரர் முகமட் அடிப் காசிம் மரணமுற்ற செய்தி வெளியானதும் போலீசார் அதிகாரிகள் நள்ளிரவு தொடங்கி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

spot_img

latest articles

explore more