Homeஅரசியல்செமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை

செமினியை கைப்பற்றுவோம்; டத்தோ சம்பந்தன் நம்பிக்கை

செமினி, பிப் 16-

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி நிச்சயம் வெற்றி பெறும் என ஐபிஎப் கட்சியின் தேசிய தலைவர் செனட்டர் சம்பந்தன் நம்பிக்கை தெரிவித்தார்.

அண்மையில் கேமரன்மலை நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றியை தக்கவைத்துக் கொண்டது. இது மக்களுக்கு தேசிய முன்னணி மீது உள்ள நம்பிக்கை இன்னும் குறையவில்லை என்பதை காட்டுவதாக அவர் கூறினார்.

தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே நம்பிக்கை கூட்டணி வெற்று வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறது என்பதை மக்கள் புரிந்துக் கொண்டனர். அதற்கு கேமரன்மலை இடைத்தேர்தல் வெற்றியே ஒரு உதாரணம் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

நடந்து முடிந்த 14ஆவது பொதுத் தேர்தலில் செமினி சட்டமன்ற தொகுதியை தேசிய முன்னணி நழுவவிட்டது. ஆனால், இந்த இடைத்தேர்தலில் தேசிய முன்னணி செமினியை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக சம்பந்தன் தெரிவித்தார்.

இத்தொகுதியில்  53,257 மொத்தம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 67.7 விழுக்காட்டினர் மலாய்காரர்களும், 22.7 விழுக்காட்டினர் சீனர்களும் 13.7 விழுக்காட்டினர் இந்தியர்களாவர்.

தேசிய முன்னணி மீது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை பிறந்திருக்கின்றது. இந்த நம்பிக்கை நீடித்தால் செமினி சட்டமன்றத்தில் நிச்சயம் வெற்றி பெறமுடியும் என சம்பந்தன் குறிப்பிட்டார்.

தேசிய முன்னணி வேட்பாளராக சகாரியா ஹனாபி களம் இறங்குகிறார். அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more