Homeகுற்றவியல்மின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்

மின்தூக்கிக்குள் பெண்ணைக் கொடூரமாக தாக்கிய ஆடவர்; 3 பேர் சாட்சியம்

கோலாலம்பூர், பிப் 16-

செராஸ், தாமான் முத்தியாரா எம்ஆர்டி ரயில் நிலையத்திலுள்ள மின்தூக்கிக்குள் ஆடவர் ஒருவர் பெண்ணைக் கொடூரமாக தாக்கி பணப்பையை பறித்துள்ளார்.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தின் வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

48 வயதுடைய அப்பெண் மின்தூக்கியினுள் நுழைந்ததும் அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம ஆடவர் கதவு மூடியவுடன் அவரை தாக்கும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.

மின்தூக்கியின் கதவு திறந்தவுடன் பணப்பை பறித்துக் கொண்டு அந்த ஆடவர் அங்கிருந்து தப்பிச் சென்றவிட்டான்.

இச்சம்பவம் தொடர்பில் 3 பேரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் ஆடவர் பறித்துச் சென்ற அந்தப் பணப்பையில் வெ.400 தொகையும் ஏடிஎம் கார்டுகளும் இருந்ததாகவும் கோலாலம்பூர் சிஐடி ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.

இச்சம்பவம் குற்றவியல் பிரிவு 394இன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்யலாம் என்று அவர் கூறினார்.

spot_img

latest articles

explore more