Homeசமூகம்சேதமடைந்த  மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000  -சிவநேசன் தகவல்

சேதமடைந்த  மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு வெ.10,000  -சிவநேசன் தகவல்

ஈப்போ பிப் 17-

அரசு மரம் விழுந்து பாதிப்பை எதிர்நோக்கிய அருள்மிகு மரத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஏ.சிவநேசன் வெ. 10,000 வழங்கவிருப்பதாக அறிவித்தார்.

சிம்பாங் பூலாய் அருகே உள்ள கம்போங் கப்பாயாங் அருள்மிகு சுப்பிரமணியர் ஆலய வளாகத்தில் உள்ள அரச மரம் வேரோடு சாய்ந்ததால் அங்குள்ள அருள்மிகு பிள்ளையார் ஆலயம் முற்றாக சேதமடைந்தது.

கடும் மழை, புயல் காரணமாக அந்த மரம் சாய்ந்தது.

இந்த தகவலை அறிந்த சிவநேசன் அந்த ஆலய நிர்மாணிப்புக்கு நிதி அறிவிப்பை செய்ததுடன் இன்று அந்த ஆலயத்திற்கு செல்லவிருப்பதாகவும் தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more