கோலாலம்பூர், பிப் 17-
செராஸ், தாமான் முத்தியாரா எம்ஆர்டி ரயில் நிலையத்தில் மின்தூக்கிக்குள் பெண் ஒருவர் ஆடவரால் தாக்கப்பட்ட சம்பவத்தின் வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அப்பெண்னை தாக்கி அந்த ஆடவர் பணப்பை பறித்து சென்றுள்ளார். சம்பந்தப்பட்ட ஆடவரை பிடிக்க 200 பேர் கொண்ட பணிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
48 வயதுடைய அப்பெண் கொடுரமாக தாக்கப்பட்டதால் அவரது தலையில் உடம்பிலும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பந்தப்பட்ட பெண், அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவம் மற்றும் மேலும் ஒருவரிடமிருந்து இச்சம்பவம் குறித்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ மஸ்லான் லசிம் இன்று டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட பணப்பையில் அப்பெண்ணின் ஏடிஎம் கார்டுகள், வெ.400, மற்றும் முக்கியமான ஆவணங்கள் இருந்ததாகவும் இச்சம்பவம் குற்றவியல் பிரிவு 394இன் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கோலாலம்பூர் சிஐடி ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் கோலாலம்பூர் போலீஸ் நிலையத்திற்கு 03-2115 9999 அல்லது 03-2146 0522 என்ற எண்ணுடன் தொடர்புக் கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோ பதிவை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.


