Homeசமூகம்வேலம்மா, ராமநாயுடுவிற்கு பொருள் உதவி; ஐபிஎப் கட்சியின் சமுகநல உதவி தொடர்கிறது

வேலம்மா, ராமநாயுடுவிற்கு பொருள் உதவி; ஐபிஎப் கட்சியின் சமுகநல உதவி தொடர்கிறது

செமினி, பிப் 20-

ஐபிஎப் கட்சி வசதி குறைந்தோருக்கு உதவிகள் செய்வது, கல்விக்காக பொருள் மற்றும் நிதியுதவி வழங்குவது போன்ற சமுகநல சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறது. அந்த வகையில், செமினியில் பலகார வியாபாரம் செய்து வரும் வேலம்மா முனியாண்டிக்கு கூடாரம் வழங்கி அக்கட்சி உதவி செய்துள்ளது.

அவர் வியாபாரம் செய்துக் கொண்டிருந்த இடத்திலுள்ள கூடாரம் அண்மையில் பலத்த மழையின் காரணமாக சேதமடைந்தது. இதனால், அவர் வியாபாரம் செய்வதில் சிரமத்தை எதிர்நோக்கினார்.

எனவே, வேலம்மாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஐபிஎப் உலு லாங்காட் இளைஞர் மற்றும் மகளிர் பிரிவினர் வேலம்மாவிற்கு இந்தக் கூடாரத்தை இலவசமாக வழங்கினார்.

இதனிடையே, நீரழிவு நோயினால் ஒரு காலை இழந்து அவதியுற்றுவரும் ராமநாயுடு அப்பள்நாயுடுவிற்கு சக்கர நாற்காலியையும் அவர்கள் வழங்கியிருக்கின்றனர்.

அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் நாற்காலியை மட்டுமே பயன்படுத்தி வந்த ராமநாயுடு விட்டில் சொந்தமாக ஒரு இடத்திற்கு செல்வதற்கு இந்த சக்கர நாற்காலியை அவர்கள் வழங்கினர்.

தேசிய மகளிர் பிரிவு தலைவி ராஜம்மா, ஐபிஎம் உலு லாங்காட் தொகுதியின் துணைத் தலைவர் மோகன், செயலாளர் நாகேந்திரன், உதவித் தலைவர் சாம்பசிவம், சிட்டிபாபு, உலு லாங்காட் இளைஞர் பிரிவுத் தலைவர் கணேஷ் குமார் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

மேலும் அதோடு அவர்கள் அனைவரும் தேர்தலுக்காக அங்குள்ள வீடமைப்பு பகுதிகளில் பிரசாரம் செய்தனர்.

spot_img

latest articles

explore more