Homeகலை உலகம்மலேசியாவில் விவேகம் கொண்டாட்டம்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் தல ரசிகர்கள்

மலேசியாவில் விவேகம் கொண்டாட்டம்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் தல ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒன்றாக விளங்கும் தல அஜித்குமாரின் ‘விவேகம்’ திரைப்படம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியீடு கண்டுள்ளது. அந்த திரைப்படத்தை உலகெங்கிலும் உள்ள அஜித் ரசிகர்கள் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார்கள். அந்த வரிசையில் மலேசிய அஜித் ரசிகர்களும் விவேகம் திரைப்படத்தை தாறுமாறாக கொண்டாடுவதற்கு தயாராகி விட்டார்கள்.

மலேசிய அஜித் நற்பணி மன்றத் தலைவர் தேவேந்திரனுடன் ஜனாதீபன்

மலேசியாவில் விவேகம் திரைப்படத்தை டி.எஸ்.ஆர். சினிபிலெக்ஸ் பெருமையுடன் வெளியிட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு மலேசிய தல அஜித் நற்பணி மன்றத்தின் சார்ப்பில் விவேகம் திரைப்படத்தின் கொண்டாட்டம் ஷாஆலமில் உள்ள டிஎஸ்ஆர் திரையரங்கில் தொடங்குகின்றது. மலேசியா தல அஜித் நற்பணி மன்றத்தின் தலைவர் தேவேந்திரன், 2 ஆண்டுகாலமாக காத்திருந்த நாள் இன்று வந்துவிட்டது. ஒரு பெருநாள் காலம்போல இது மாறியிருப்பதாக அனேகனிடம் கூறினார்.

தல அஜித் பெயரில் பல சமுதாய நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றோம். இதன் மூலம் பலர் பயன் பெறுகிறார்கள். அவர்களின் மகிழ்ச்சியில், இறைவனை நாங்கள் காண்கின்றோம். இயலாதவர்களுக்கு உதவுங்கள் என்றார் அஜித். அவரின் வழிகாட்டலில் எங்கள் பயணம் செல்கின்றது. தல என்றாலே கொண்டாட்டம்தான். அந்த வகையில் விவேகம் கொண்டாட்டம் இன்னும் பல வாரங்களுக்குத் தொடருமென தேவேந்திரன் கூறினார்.

திவ்யதர்ஷினி

நான் தலையின் தீவிர ரசிகை. படங்களில் நடிக்கும் போது, அவருக்கு ஏதாவது விபத்து நடந்தால், கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்யும் அளவிற்கு அவர் மீதும் அன்பு கொண்டிருக்கின்றேன் என மலாக்காவைச் சேர்ந்த திவ்யதர்ஷினி நாயுடு கூறினார். தாம் மட்டுமே வருமானம் ஈட்ட வேண்டுமென்ற நோக்கத்தில் செயல்படாதவர் அஜித். தமது ரசிகர்களை திருப்தி படுத்த வேண்டுமென்பதற்காக விவேகம் திரைப்படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளார். அவரின் உழைப்பு நிச்சயம் வெற்றியை கொடுக்குமென நம்புகிறேன் என்றார் திவ்யா.

சுனில்

2015ஆம் ஆண்டு தீபாவளிக்கு தலயின் வேதாளம் திரைப்படம் வெளியீடு கண்டது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு விவேகம் திரைப்படம் வெளியீடு கண்டிருப்பதால், கலை உலகமே இந்த திரைப்படத்தை காண காத்திருக்கின்றது. இத்திரைப்படத்தின் டீசர், டிரைலெர் ஆகியவை இத்திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. குறிப்பாக ஆங்கில திரைப்படத்திற்கு இணையாக இதில் சண்டை காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது பிரமிக்க வைக்கின்றது என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த சுனீல்.

சுரேஷ்

நான் மட்டுமல்ல என் குடும்பமே தல ரசிகர்கள். சிறு வயது முதல் நான் ரசிக்கும் ஒரே நடிகர் அஜித். தீபாவளிக்கு தல திரைப்படம் வெளியீடு கண்டால், அதுதான் எனக்கு தீபாவளி என்கிறார் சுரேஷ் வேலுபிள்ளை. அஜித்தின் எந்த திரைப்படத்திற்கும் இல்லாத எதிர்பார்ப்பு ஏன் விவேகத்திற்கு கிடைத்துள்ளது என்று பார்த்தால், அவரின் கடின உழைப்புதான் காரணம். அதற்கு அஜித் ரசிகர்களும் முதன்மைக் காரணம். விவேகம் வேற மாதிரி இருக்கும். நிச்சயம் மிகப் பெரிய சாதனையை படைக்கும் என சுரேஷ் கூறினார்.

தியாகு

தல வந்தாலே மாஸ். அது அவருக்கே உள்ள சிறப்பு என கோலாலம்பூரைச் சேர்ந்த தியாகு கூறுகிறார். 2 ஆண்டுகளுக்கு பிறகு அவரின் திரைப்படம் வெளிவருவதால், கொண்டாட்டம் அடுத்த கட்டத்தை எட்டுமென்பதில் சந்தேகம் இல்லை. விவேகம் திரைப்படத்தில் திருப்புமுனையான காட்சிகள் நிறைய இருக்குமென நினைக்கின்றேன். சிவா இயக்கிய 3 திரைப்படங்களிலும் அதனை காண முடிந்தது. அதேபோல் இந்த திரைப்படத்தில் பல அம்சம்ங்கள் உள்ளடக்கியிருக்குமென நம்புகிறேன் என்றார் தியாகு.

சிவனேஷ்

விவேகம் திரைப்படத்திற்காக தல சிக்ஸ் பெக் வைத்துள்ளார். அந்த காட்சியை திரையரங்கில் காண வேண்டுமென்று காத்திருக்கின்றேன். நிச்சயம் இந்த காட்சி அஜித் ரசிகர்களை வெகுவாகக் கவரும். அவரின் கடின உழைப்பை டிசரில் காண முடிந்தது. தமிழ் சினிமாவின் தலையெழுத்தை மாற்றக்கூடிய திரைப்படமாக விவேகம் அமையும். ரசிகர் மன்றத்தை கலைத்த பிறகும் இத்தனை கோடி ரசிகர்களை கொண்டுள்ள ஒரே நடிகர் அஜித்தான் என்கிறார் கூலாய்ஜெயாவைச் சேர்ந்த சிவனேஷ்.

மதுமிதா

4 வயது முதலே நான் அஜித் ரசிகை. அவருடைய திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பேன். தன்னுடைய திரைப்படத்தில் யாரையும் காயம்படுத்தும் வகையில் காட்சிகளை அமைக்க மாட்டார். நல்ல கருத்துள்ள சிந்தனையுள்ள திரைக்கதைகளுக்கு முக்கியத்துவம் வழங்குவார். விவேகம் திரைப்படத்திற்காக ஆவலோடு காத்திருந்தோம். அந்த நாள் வந்துவிட்டது. அனிரூத் இசையில், பாடல்கள் அனைத்தும் சூப்பரா இருக்கு. நிச்சயம் விவேகம் வேற மாதிரி இருக்கும் திருப்பூரைச் சேர்ந்த மதுமிதா கூறுகிறார்.

தீபகாந்தன்

யோகி பி பாடிய செவைவெர் பாடல் இப்போதே ஹிட் ஆகிவிட்டது. மலேசிய கலைஞரின் பாடல் விவேகம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது கூடுதல் மகிழ்ச்சி.  அந்த காட்சியில் தலயை பார்க்க வேண்டுமென ஆவலோடு காத்திருக்கின்றேன். குறிப்பாக ஹோலிவுட் திரைப்படத்திற்கு இணையாக ஒரு தமிழ்ப்படம் விவேகம். உடலை மேம்படுத்துவதற்கு வயது வரம்பு இல்லை என்பதை அஜித் இந்த திரைப்படத்தின் மூலம் சொல்லியிருக்கின்றார் என புக்கிட் மெர்தாஜமை சேர்ந்த தீபகாந்தன் கூறுகிறார்.

செல்வமாலினி

உலகத்தில் உள்ள அனைத்து அஜித் ரசிகர்களும் காத்திருந்த அந்த நாள், நேரம், நிமிடம், நொடி இதுதான். இன்று விவேகம் ரீலிஸ். மகிழ்ச்சியை வார்த்தையால் வர்ணிக்க முடியாது. விவேகம் என்றவுடனே தனி புத்துணர்ச்சி மனதில் உண்டாகின்றது. அனைவரையும் கவர்ந்த திரைப்படமாக இது அமையும். கதை, திரைக்கதை, இசை என அனைத்தும் சிறப்பாக உள்ளது. அதைவிட தல இந்த திரைப்படத்தில் இருக்கின்றார். வேற என்ன வேண்டும் நமக்கு. கொண்டாடுவோம் தல மாஸ் என செல்வமாலினி கூறுகிறார்.

தமிழ் சினிமாவின் இன்றைய வைரலாக விவேகம் மாறியுள்ளது. அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் விவேகம் திரைப்படத்தை பார்க்க வேண்டுமென காத்திருக்கின்றார்கள். சிவாவுடன் அஜித் இணைந்த வீரம், வேதாளம் ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்றன. அந்த வரிசையில் விவேகமும் இடம்பிடிக்குமென அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றார்கள்.

spot_img

latest articles

explore more