கோலாலம்பூர், ஆக.24 –
2017 சீ விளையாட்டுப் போட்டியின் கால்பந்துப் போட்டியின் ஏ பிரிவில் மலேசியா வெற்றியாளராக வாகை சூடியுள்ளது. புதன்கிழமை ஷா ஆலாம் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மலேசியா 3 – 1 என்ற கோல்களில் லாவோசை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் ஏ பிரிவின் வெற்றியாளராக வாகை சூடியுள்ள மலேசியா, பி பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணியை அரையிறுதி ஆட்டத்தில் சந்திக்கவுள்ளது. லாவோசுக்கு எதிராக தேசிய கால்பந்து அணியின் பயிற்றுனர் டத்தோ ஓங் கிம் சுவி 8 மாற்றங்களை செய்திருந்தார்.
27 ஆவது நிமிடத்தில் மலேசியாவின் முதல் கோலை ஜப்ரி பிர்டாவுஸ் சியூ அடித்தார். எனினும் ஐந்து நிமிடங்களுக்குப் பின்னர் பான் தாவோங் தனின் மூலம் லவோஸ் ஆட்டத்தை சமப்படுத்தியது.
மலேசியாவின் இரண்டாவது கோலை கேப்டன் அடிப் சைனுடின் அடித்தார். ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் மலேசியாவின் 3 ஆவது கோலை ஜப்ரி அடித்தார்.


