Homeவிளையாட்டுஅஞ்சல் ஓட்டத்தில் கோமளம் இல்லாததால் தோல்வி காண நேரிட்டது!

அஞ்சல் ஓட்டத்தில் கோமளம் இல்லாததால் தோல்வி காண நேரிட்டது!

கோலாலம்பூர், ஆக.25
சீ போட்டியின் 4×100 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் மலேசிய பெண்கள் அணி தோல்வியை தழுவியுள்ளனர். இவர்கள் குறைந்தது வெண்கல பதக்கம் பெறுவார்கள் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நிலையில் ஓட்டத்தை முடித்துள்ளனர்.

ஜைடாத்துல் ஹுஸ்னியா சூல்கிப்ளி, சித்தி ஃபாத்திமா முகமது, ஹஸ்ரி நபிலா அலியாஸ், ஃபாதின் ஆகியோர் இந்த அணியில் இடம்பெற்றனர்.

இந்த அஞ்சல் ஓட்டத்தில் வியட்நாம் தங்கத்தையும் தாய்லாந்து வெள்ளியையும் பிலிப்பைன்ஸ் வெண்கலத்தையும் வென்றது. மலேசிய அணியில் எஸ்.கோமளம் இல்லாதது அணிக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்று சித்தி ஃபாத்திமா ஒப்புக்கொண்டார். கோமளம் இல்லாத காரணத்தினால் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.

அவர் இருந்திருந்தால் சிறந்த திறனை வெளிபடுத்தியிருக்க முடியும். நாட்டின் சிறந்த ஓட்டப்பந்தய வீராங்கனைகளில் ஒருவராக கோமளம் திகழ்கிறார். வலைவுகளில் அவர் சிறந்த முறையில் ஓடக்கூடியவர். தேசிய அணி வெற்றி பெற அவரால் உதவ முடியும். கோமளம் இருந்திருந்தால் வெண்கலப் பதக்கத்தையாவது நாங்கள் வென்றிருப்போம் என்று சித்தி ஃபாத்திமா கூறினார். கட்டொழுங்கு காரணமாக கடைசி நேரத்தில் கோமளம் இந்த அணியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

spot_img

latest articles

explore more