Homeசமூகம்அறியாமையை அகற்றும் தீபாவளி - டான்ஸ்ரீ டத்தோ சோமசுந்தரம்

அறியாமையை அகற்றும் தீபாவளி – டான்ஸ்ரீ டத்தோ சோமசுந்தரம்

தீப ஒளி இருளை அகற்றி வெளிச்சத்தைத் தருவதைப் போல் நம்மிடையே உள்ள அறியாமை எனும் இருளை அகற்றி மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடுவோம் என தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ கே.ஆர்.சோமசுந்தரம் தெரிவித்தார்

தீப ஒளி பிறருக்கு வெளிச்சம் தந்து வழிகாட்டுவது போல் நாமும் பிறருக்குப் பயன்பட வேண்டும் என்பதை தீபாவளி உணர்த்துகின்றது.

பட்டாசு வெடித்து புத்தாடை அணிந்து, வீட்டுக்கு வரும் விருந்தினர்களை தித்திப்புப் பண்டங்கள் தந்து உபசரித்து மகிழ்ச்சியாக இருப்பது போல் எப்போதும் சந்தோஷமாக மனதை வைத்து கொள்வோம் என தமது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

இருள் நீங்கி ஒளி பிறப்பது போல் கருத்து வேறுபாடுகள் நீங்கி நல்லது நடக்க இந்தத் தீபாவளி நிச்சயம் வழிசெய்யும் என்றும் அவர் கூறினார்.

அதே சமயத்தில், இந்தத் தீபத் திருநாள் இந்தியர்களுக்கு முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் கொண்டு வரும் என்று  தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ பி சகாதேவன் தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more