கோலாலம்பூர், நவ.23-
தனது தலைமைத்துவத்திற்கு எதிராக, எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தால், அதனை ஏற்க தாம் தயாராக இருப்பதாக, பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
தமக்கு யார் ஆதரவை அளிக்க மாட்டார்கள் என்பது தெரியாது. ஆயினும், ஒருவேளை அத்தீர்மானம் கொண்டு வரப்பட்டால், சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் முடிவிற்கு தாம் மதிப்பளிக்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாஸூம் அம்னோமும் தனக்கு ஆதரவை அளிப்பதாக தெரிவித்துள்ளது மட்டுமே எனக்கு தெரியும். அக்கட்சிகளுக்கு நன்றி. தமக்கு யார் ஆதரவை அளிக்க மாட்டார்கள் என்பது தெரியவில்லை. அத்தரப்பினர் தமக்கு ஆதரவளிக்காவிட்டால், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வரலாம். நிச்சயமாக, தாம் சட்டத்திற்கு மதிப்பளிக்கவிருப்பதாகவும் துன் டாக்டர் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.


