Homeமலேசியாஇடப்பற்றாக்குறை; தனியார் சிறைச்சாலைகள் குறித்து பரிசீலிக்க அரசாங்கம் தயார்!

இடப்பற்றாக்குறை; தனியார் சிறைச்சாலைகள் குறித்து பரிசீலிக்க அரசாங்கம் தயார்!

கோலாலம்பூர், நவ.23-

நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் இடப்பற்றாக்குறை நிலவுவதால், அதனை எதிர்கொள்ளும் வகையில், தனியார் சிறைச்சாலைகளை ஏற்படுத்துவது குறித்து பரிசீலிக்க அரசாங்கம் தயாராக உள்ளது.

நடப்பில், சிறைகளில் 52,000 கைதிகளுக்கு மட்டுமே இடமளிக்க முடியும் என்கிற நிலையில், சுமார் 74,000 கைதிகள் தண்டனைகளை அனுபவித்து வருவதாக உள்துறை துணையமைச்சர் டத்தோ முகமட் அசிஸ் ஜம்மான் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிதி அழுத்தம் காரணமாக, இங்கிலாந்தில் உள்ளது போல், தனியார் சிறைச்சாலைகளை ஏற்படுத்தப்படுவது குறித்து தனது தரப்பு ஆராயவும் பரிசீலிக்கவும் கூடும் என்றாரவர்.

அண்மையில், இங்கிலாந்திற்கு சென்ற போது, அங்கு இயங்கிவரும் தனியார் சிறைச்சாலைகளைப் பார்வையிட்டதாக கூறிய டத்தோ முகமட் அசிஸ் ஜம்மான், அம்முயற்சியின் வாயிலாக, அரசாங்கம் புதிய சிறைச்சாலைகளை நிர்மாணிக்க வேண்டியிருக்காது எனவும் கூறியுள்ளார்.

அது குறித்து அனைத்து நிலைகளிலும் ஆராயும் பொறுப்பு சிறைத்துறையிடம் வழங்கப்படும். அவர்கள் வழங்கும் அதன் ஆய்வறிக்கை, பின்னர் பரிசீலணைக்காக உள்துறை அமைச்சிடம் ஒப்படைக்கப்படும். ஒருவேளை, தனியார் சிறைச்சாலைகள் ஏற்படுத்தப்பட்டால், சிறிய குற்றங்களுக்காக தண்டனையைப் பெறும் கைதிகளை அங்கு தங்க வைக்கலாம் எனவும் டத்தோ முகமட் அசிஸ் ஜம்மான் கூறியுள்ளார்.

spot_img

latest articles

explore more