புத்ராஜெயா, நவ.23-
ஜொகூர், தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் மோசமான தோல்வியைத் தொடர்ந்து, அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அனைத்து பக்காத்தான் தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற பக்காத்தானின் தலைவர்கள் மன்ற கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அதன் தலைவரும் பிரதமருமான துன் டாக்டர் மகாதீர் அந்த தகவலை வெளியிட்டார்.
அமைச்சரவை மாற்றத்திற்கு பக்காத்தானின் தலைவர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆயினும், அமைச்சரவையிலிருந்து யாரை நீக்குவது என்பது தொடர்பில் தாம் இன்னும் முடிவு செய்யவில்லை என துன் டாக்டர் மகாதீர் கூறினார்.
மேலும், அமைச்சரவையில் பி.கே.ஆரின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சேர்த்துக்கொள்ளப்படுவாரா? என செய்தியாளர்கள் வினவிய போது, சாத்தியமல்லாதது எதுவும் இல்லை எனவும் அவர் பதிலளித்தார்.
அப்போது, துன் மகாதீரின் அருகில் இருந்த அன்வார், அமைச்சராவதற்கு தாம் கோரிக்கை வைக்கவில்லை என கூறினார்.


