Homeஅரசியல்பக்காத்தானின் தவறுகள் தெரியும்; தீர்வு காண்போம்! -துன் மகாதீர்

பக்காத்தானின் தவறுகள் தெரியும்; தீர்வு காண்போம்! -துன் மகாதீர்

புத்ராஜெயா, நவ.23-

ஜொகூர், தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலின் மோசமான தோல்வியைத் தொடர்ந்து, தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சனையைப் பக்காத்தான் ஹாராப்பான் அடையாளம் கண்டுள்ளது.

ஆயினும், அது என்ன பிரச்சனை என்பதை விவரிக்காத அக்கூட்டணியின் தலைவரான துன் டாக்டர் மகாதீர் முகமட், என்ன செய்ய வேண்டும் என்பது உறுப்புக் கட்சிகளுக்கு தெரியுமென கூறினார்.

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற பக்காத்தானின் தலைவர்கள் மன்ற கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த துன் மகாதீர் அதனைத் தெரிவித்தார்.

மக்கள் என்ன அதிருப்தியைக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கண்டறிவோம். நாங்கள் எதுவும் செய்யவில்லை என கருதினால், அதத சரிய செய்ய முயற்சிப்போம். அமைச்சரவையை மறுசீரமைக்க வேண்டுமென அவர்கள் கருதினால், நிச்சயமாக செய்வோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 அரசாங்கத்தின் மீது திருப்தியாக உள்ளவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். அதிருப்தியுடையவர்கள் குரல் எழுப்புகிறார்கள். அதனால், செவிசாய்க்க வேண்டிய அவர்களின் கருத்துகளை அரசாங்கம் ஆராயும். மேலும், அரசாங்கம் அனைவருக்கும் நியாயமாக நடந்துக்கொள்கின்றது.

பக்காத்தான் முழுமையாக டிஏபியின் கட்டுப்பாட்டில் இருப்பதாக மலாய்க்காரர்கள் கருதுகிறார்கள். சீனர்களோ டிஏபியைத் தாம் பயன்படுத்திக்கொள்வதாக கருதுவதாகவும் துன் மகாதீர் கூறினார்.

spot_img

latest articles

explore more