Homeமலேசியாதமிழ் மொழி இந்துக்களின் மொழியா ? மன நல கோளாறின் உச்சத்தில் மோகன் ஷான் !...

தமிழ் மொழி இந்துக்களின் மொழியா ? மன நல கோளாறின் உச்சத்தில் மோகன் ஷான் ! குறிஞ்சித்திட்டுத் தமிழ்க்கழகம் கண்டனம் !

ஈப்போ – பிப்பரவரி 26:- சர்ச்சைக்குப் பெயர்போன மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் மோகன் ஷான் மீண்டும் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ் மொழி இந்துக்களின் மொழி என்றும் அதனைக் கையகப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
  • தமிழ் என்று தொடங்கி இந்துக்களின் மொழியானது ?
  • யார் தமிழ் மொழியை இந்து மொழி ஆக்கியது ?
  • பொங்கல் விழாவைத் தொடர்ந்து தற்பொழுது மோகன் ஷான் தமிழ் மொழியைக் குறி வைத்து அதற்குச் சமய சாயம் பூசும் நடவடிக்கையின் பின்னணி என்ன ?
  • வரலாறு அறிந்துதான் மோகன் ஷான் பேசுகிறாரா ?
இந்து சமயம் எங்கிருந்து தொடங்கியதையும் தமிழ் மொழியின் வரலாற்றையும் அறியாத மோகன் ஷான் தொட்டதற்கெல்லாம் சமய சாயாம் பூச வேண்டாம். சமய அமைப்பின் தலைவராக இருப்பதால் எல்லாவற்றுக்கும் சமய சாயம் பூசும் நடவடிக்கையைப் பார்த்தால் மன நல கோளாறின் உச்சமாகத்தான் தோன்றுகிறது. தமிழ் மொழி இந்துக்களின் மொழி என்றால் இதே நாட்டில் வாழும் இந்து மலையாளிகள், இந்து தெலுங்கர்கள், இந்து சீக்கியர்கள் போன்றவர்களின் மொழி ஆகிவிடுமா ? மூடத் தனத்தின் உச்சக்கட்டம் என அதே அமைப்பிலோ அல்லது மோகன் ஷானின் சுற்றத்தாரோ எடுத்துச் சொல்லவில்லையா ? குறிஞ்சித்திட்டுத் தமிழ்க்கழகம் மலேசிய இந்து சங்கத்தின் தலைவரின் அந்த அறிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறது.
spot_img

latest articles

explore more