Homeகுற்றவியல்உணவகத்தின் முன் கைகலப்பு  : ஐவர் கைது

உணவகத்தின் முன் கைகலப்பு  : ஐவர் கைது

பிரிக்ஃபீல்ட்ஸ்  | மார்ச் 2

இங்குள்ள துன் சம்பந்தன் சாலையில் செயல்பட்டுவரும் உணவகத்தின் முன் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த கைகலப்பில் ஈடுபட்டதாக நம்பப்படும் 5 ஆடவர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது.

பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி அன்னுவார் ஓமார் இவிவகாரம் குறித்துத் தெரிவிக்கையில், பல்வேறு சோதனைகளில் அச்சம்பவத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் 19 முதல் 23 வயதுக்குட்பட்டவர்கள் இன்று அதிகாலை வரை நடந்த கோலாலம்பூரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகிக்கப்படும் அவர்கள் அனைவருக்கும் முந்தையக் குற்றப் பதிவுகள் ஏதும் இல்லை எனவும் மேல் விசாரனைக்கு அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் குற்றவியல் சட்டப் பிரிவு 148இன் படி விசாரிக்கப்படுவர்.

இரவு நடந்த அச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் 12 பேர் கண்ணாடி போத்தல்களை உடைத்தும் பாராங்கத்தி, கட்டைகளை வைத்துக் கொண்டும் அங்கு அமளி துமளியை ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

எஸ்.ஓ.பி.யைப் பின்பற்றி இரவு 10.00 மணிக்கு  உணவகத்தை அடைக்கும் நேரத்தில் அந்த கும்பல் உணவை வாங்க வந்துள்ளனர். ஆனால், உணவக மேளாளர் அதற்கு மறுப்பு தெரிவிக்கும்போது அந்த கலாட்டா தொடங்கியுள்ளது.

அங்கு நடந்த கலவரம் சமூக ஊடகங்களில் பக்கிரப்பட்டு மின்னல் வேகத்தில் பரவியது.

spot_img

latest articles

explore more