spot_img
13 C
London
spot_img
Home மலேசியா கல்வி முதலாம் ஆண்டில் 10 மாணவர்களுடன் சபாக் பெர்னாம் தமிழ்ப் பள்ளி

முதலாம் ஆண்டில் 10 மாணவர்களுடன் சபாக் பெர்னாம் தமிழ்ப் பள்ளி

0
564

சபாக் பெர்னாம் | மார்ச் 2:-

இங்குள்ள சபாக் பெர்னாம் தமிழ்ப்பள்ளியில் முதலாம் ஆண்டுக்கு 10 மாணவர்கள் பதிந்து நேற்று தங்களின் கல்விப் பயணத்தைத் தொடங்கினர்.

மேலும், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்குப் பிறகு திறக்கப்பட்ட நேரடி வகுப்பு கற்றல் கற்பித்தலில் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 9 பேர் பள்ளிக்குத் திரும்பி இருந்தனர்.

நாள் திங்கள் கிழமை பள்ளி முதல் நாள் சிறப்பாக தொடங்கியது. புதிய நடைமுறை விதிமுறையின் கீழ் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் பள்ளிக்கு வருகைப் புரிந்தனர்.

முகக் கவரி அணிதல் மற்றும் சமூக இடைவெளி கட்டாயமாக கடைபிடிக்கப் பட்டது. கற்றல் கற்பித்தல் நடவடிக்கை செவ்வனே ஆசிரியர்களால் நடத்தப்பட்டது என  அப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு. நாராயண ஶ்ரீ ராமநாயுடு தெரிவித்தார்.