Homeகலை உலகம்நயன்தாராவிற்கு கல்யாணம்?

நயன்தாராவிற்கு கல்யாணம்?

எத்தனை முறை விழுந்தாலும் அத்தனை முறையும் துள்ளி எழுந்து ஓடி முதல் இடத்தை பிடிக்கும் ஒரே நடிகை நயன்தாரா மட்டுமே. சினிமாவில் கிடைத்த அந்த முதல் இடம் இவருக்கும் வாழ்வில் அத்தனை எளிதாய் கிடைக்கவில்லை. அன்புக்காக காதலில் விழுந்த இவர் தோற்றுபோனதென்னவே உண்மைதான். ஆனால் இவரின் வாழ்வு அத்தனை சீக்கிரம் இவரை தவிக்கவிடவில்லை…

விக்னேஷ்சிவன் இயக்த்தில் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்த  ”நானும் ரெளடித்தான்” திரைபடத்தின் போதே விக்னேஷ்சிவன்-நயன் தாரா இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்ததாக கூறப்படடது. இதனை உறுதி படுத்தும் வகையில், பல இடங்களில் இந்த ஜோடி ஒன்றாக காட்சி அளித்தது.

இந்நிலையில், விக்னேஷ்சிவனின் இந்த ஆண்டு பிறந்தநாளை இந்த ஜோடி அமெரிக்காவின் நியூயார்க்கில் கொண்டாடி இருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் தற்போதும் இவர்களை போலவே சமூக வலைத்தளங்களில் உலா வந்துக்கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் கேட்டி மேள சத்தம் இவர்களின் வீட்டில் கேட்கும் என்றும் கூறப்படுகிறது.

spot_img

latest articles

explore more