Homeஇந்தியா/ ஈழம்இன்னும் 2 வாரத்தில் தமிழ்நாட்டில் குடியரசு தலைவர் ஆட்சியா?

இன்னும் 2 வாரத்தில் தமிழ்நாட்டில் குடியரசு தலைவர் ஆட்சியா?

 

சென்னை, செப்.20-

ஆளும் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்று கூறிவந்த டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார்.

இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி கருத்து தெரிவித்திருக்கிறார். அதில், இரண்டு வாரத்துக்குள் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

“தினகரன் ஆதரவு 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம் சட்டப்படி செல்லாது. அவர்கள் 18 பேரும் கட்சியில் இருந்து விலகவில்லை. அதேசமயம் சட்டமன்றத்தில் கொறடா உத்தரவையும் மீறவில்லை. இந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் சட்டப்படி செயல்பட்டு உரிய முடிவை எடுக்க வேண்டும்.

மேலும், தமிழகத்தில் இரண்டு வாரத்துக்குள் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க விவகாரத்தில் உரிய தீர்வு கிடைக்கும் வரையில் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறக்கூடாது” என சுப்ரமணியன் சுவாமி கூறியிருக்கிறார்.

spot_img

latest articles

explore more