ஆஸ்ட்ரோவின் மாபெரும் 3ஆவது அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சி நேற்று செப்டம்பர் 21-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 24-ஆம் தேதி வரை, 4 நாட்களுக்கு ஜிஎம் கிள்ளான் வளாகத்தில் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை மிகப் பிரமாண்டமாக நடைபெறுகின்றது.
முதல் நாளான நேற்று 21-ஆம் தேதி Astro Circle ஏற்றி நடத்தும் புதையல் தேடும் போட்டி, ஆடை அலங்காரம், டி.எச்.ஆர் ராகா அறிவிப்பாளர்களின் நேரடி வெளி ஒலிபரப்பு மற்றும் ‘என்றுமே ராஜா’ எனும் கலைநிகழ்ச்சி இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில், பின்னணி பாடகி சாதனா சர்கம் கலந்து கொண்டார். இன்று 22-ஆம் தேதி Astro Circle– யின் முறுக்கு செய்யும் போட்டி, 10-ல் 5 தீபாவளி பரிசு மழை, ஆன் டிமாண்ட் நேரம் மற்றும் தாரா எச்.டி-யின் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடக்கின்றது. அதனைத் தொடர்ந்து, இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ள அதிகாரப்பூர்வ திறப்பு விழாவில் தமிழ், மலையாளம், தெலுங்கு என தற்போது பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க களமிறங்கியுள்ள நடிகை லக்ஷ்மி ராய் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.
அதுமட்டுமின்றி, 23-ஆம் தேதி ஆஸ்ட்ரோ வானவில் விரைவில் ஒளியேறவுள்ள ‘சினிமா எனும் நதியினிலே’ அறிமுகம் விழா மற்றும் ‘ஆஸ்ட்ரோ உறுதிணை விருது’ விழா இடம்பெறும். பிறகு, பின்னணி பாடகி ஹரிணி கலந்து கொள்ளும் ‘தீபாவளி கொண்ட்டாடம் கலைநிகழ்ச்சி’ இரவு 7 மணி தொடக்கம் 10 மணி வரை நடைபெறும். இந்நிகழ்ச்சியில் நம் உள்ளூர் கலைஞர்களும் கலந்து தங்களுடைய படைப்புகளை வழங்கவுள்ளார்கள்.
இறுதி நாள் 24-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை குழந்தைகளுக்கு நாடன போட்டி, மிமீகிரி போட்டி, கலைஞர்களின் சந்திப்பு, உள்ளூர் பாடகி புனிதா ராஜாவின் ஆல்பம் இசை வெளியீடு, விழுதுகள் நிகழ்ச்சியின் அறிவிப்பாளர்களின் சந்திப்பு மற்றும் டி.எச்.ஆர் ராகா அறிவிப்பாளர்களின் கலைநிகழ்ச்சிகள் போன்றவை இடம்பெறவுள்ளது.அதுமட்டுமின்றி, Astro Circle ஏற்றி நடத்தும் போட்டிகளிலில் கலந்து விமான பயணச்சீட்டுகள், எச்.டி தொலைக்காட்சி, Playstation 4 Slim போன்ற பல அரிய பரிசுகளைத் தட்டிச் செல்லுங்கள்.
மேல்விவரங்களுக்கு www.astroulagam.com அல்லது www.facebook.com/AstroUlagam அகப்பக்கங்களை நாடுங்கள்.


