சிப்பாங், மே 12-இங்குள்ள டோல் சாவடியில் நின்று கொண்டிருந்த 15 வாகனங்களை லோரி ஒன்று மோதி கடும் வாகன விபத்தையும் நெரிசலையும் ஏற்படுத்தியுள்ளது.
அதில், நீலாயில் இருந்து வந்து கொண்டிருந்த சிறிய ரக லோரியின் பிரேக் பிடிக்காததால், இந்த விபத்து நேர்ந்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் நடந்த இந்த விபத்தின் வீடியோ பதிவுகள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனையடுத்து, நேற்று அதிகாலை 2.10 மணியளவில் ஜொகூர் பாரு – கோத்தா திங்கி சாலையில் மோட்டார் சைக்கிளை மோதிய போதையில் இருந்த காரோட்டி, வங்காள தேசிக்கு மரணத்தை ஏற்படுத்தியிருந்தார்.
அங்கு நடந்த விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவச் சென்ற உணவு விநியோகத்தில் ஈடுபட்ட வங்காள தேச ஆடவரான முகமட் சொஹாய்மி இஷாமின் அதில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.


