Homeசமூகம்திருவிழாக்களில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு: ரகசிய காமிராக்களை பொருத்த சிவநேசன் ஆலோசனை

திருவிழாக்களில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு: ரகசிய காமிராக்களை பொருத்த சிவநேசன் ஆலோசனை

தெலுக் இந்தான் , மே 12-ஆலய திருவிழாக்களில் கலந்து கொள்ளும் தாய்மார்கள் பலர் தாலிக்கொடிகள் மற்றும் தங்கச் சங்கலிகளைப் பறிக்கொடுக்கும் சம்பவம் குறித்து மாநில சுகாதாரம், மனிதவளம், தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் இந்திய சமூக விவகாரங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன் கவலை தெரிவித்தார்.

சித்தியவான் ஸ்ரீ சுப்பிரமணியர் மற்றும் கோப்பெங் மகா மாரியம்மன் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற ஆலய கும்பாபிஷேக விழாவில் மொத்தம் 10 பெண்கள் தாலிக்கொடி மற்றும் தங்கச் சங்கிலிகளைப் பறிகொடுத்தனர்.

இந்தச் சம்பவம் அதிகரித்து வருவதால் கொள்ளையர்களைக் கண்டுபிடிக்க ஆலயங்களில் ரகசிய காமிராக்களை பொருத்துமாறு சிவநேசன் ஆலோசனை கூறினார்.

தெலுக் இந்தான் அருள் மிகு முருகன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி திருவிழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த ஆலயத்தில சித்ரா பௌர்ணமி திருவிழா மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

இன்று பொது விடுமுறையானதால் வழக்கத்திற்கு மாறாக ஆயிரக்கணக்காண பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்து கொண்டனர்.

பக்தர்கள் காவடிகள் சுமந்தும், அலகுகள் குத்தியும் , முடி காணிக்கை செலுத்தியும் தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.

 

 

spot_img

latest articles

explore more