கிள்ளான், மே 13-போர்ட் கிள்ளானில் கொண்டாடப்பட்ட சித்ரா பௌர்ணமி திருவிழாவையொட்டி சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் சார்பில் 3,000 பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டது.
இந்த அன்னதான நிகழ்ச்சியை சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் நந்தா, கோலலங்காட் பிபிபி கட்சியின் இடைக்கால தலைவர் ரவி, கோத்தா ராஜா பிபிபி தொகுதி தலைவர் டாக்டர் விஜய், மூர்த்தி ஆகியோருக்கு டாக்டர் சுரேந்திரன் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
சிலாங்கூர் மாநில பிபிபி கட்சி 3,000 பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் குளிர்பானங்களும் வழங்கிய நிகழ்ச்சியில் வீர காளிமுனி இயக்கமும் இணைந்து கொண்டது மேலும் சிறப்பு சேர்த்தது.


