Homeசமூகம்கோவிட் தொற்று அபாயம் மீது அணுக்கமான கண்காணிப்பு! 

கோவிட் தொற்று அபாயம் மீது அணுக்கமான கண்காணிப்பு! 

புத்ரா ஜெயா, மே 17- தாய்லாந்திலும் சிங்கப்பூரிலும் கோவிட்-19 தொற்று அதிகரித்து வருவதை அடுத்து நாட்டில் அது பற்றிய கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்லி அகமது கூறினார்.

நமது நாட்டிலும் வாரத்திற்கு 600 பேருக்கு தொற்று கண்டிப்பதாக அறியப்பட்டாலும் அது அபாய கட்டத்தை எட்டவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தாய்லாந்தில் 16,607 பேருக்கும் சிங்கப்பூரில் 14,200 பேருக்கும் கோவிட் தொற்று கண்டிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.

பொதுமக்கள் தங்களது சுகாதாரத்தைப் பேணுவதோடு நோய் கண்டோரிடமிருந்து விலகி இருக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

 

 

spot_img

latest articles

explore more