Homeசமூகம்டிரம்ப் வரி & 2025 பங்குச் சந்தையின் தாக்கம் மீதான  கண்ணோட்டம்

டிரம்ப் வரி & 2025 பங்குச் சந்தையின் தாக்கம் மீதான  கண்ணோட்டம்

கோலாலம்பூர், மே 17-     ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடத்தப்படும் சந்திப்புக் கூட்டம் ஒரு வாராந்திர சமூக வர்த்தக நிகழ்ச்சியாகும்.

இவ்வார நிகழ்ச்சியில் டிரம்ப் வரி மற்றும் 2025 பங்குச் சந்தையின் விளைவு:ஒரு கண்ணோட்டம் என்பது குறித்து ‘மே பேங்க் இன்வெஸ்ட்மெண்ட் பேங்க் பெர்’ நிறுவனத்தின் பங்குச் சந்தை தரகர் பரந்தாமன் நம்முடன் பங்கு கொள்ள இருக்கிறார்.

இதில்:

• டிரம்பின் வரி அறிவிப்புக்கு முன்னர் மற்றும் அறிவிப்புக்குப் பின்னர்

• சந்தையின் உடனடி நடவடிக்கை

• வரி அறிவிப்பிலுள்ள மாற்றங்கள்

• மாற்றங்கள் மீதான சந்தைகளின் நடவடிக்கை

• அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வரி மாற்றம்

• இந்தியா/பாகிஸ்தான் சர்ச்சை

• உள்ளூர் தாக்கம்

• நடப்புச் சந்தை போக்கு

ஆகியவை உட்பட இன்னும் விரிவான விளக்கமளிப்பை பரந்தாமன் வழங்குவார்.

ஆதலால், இந்த வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்திக் கொண்டு வரும் திங்கட்கிழமை (19ஆம் தேதி) இரவு 7.45 மணி தொடங்கி 9.00 மணி வரை நடைபெறும் இந்த இலவச சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு 2025 பங்குச் சந்தையின் விளைவு: ஒரு கண்ணோட்டம் குறித்து நன்கு தெரிந்து கொள்ளும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்த மெய்நிகர் நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் பின்வரும் இணைப்பில் இணைந்து கொள்ளலாம்.ZOOM ID: 878 2811 0295PASSCODE: 12345

இந்நிகழ்ச்சி குறித்த மேல் விபரங்களுக்கு 0123025643 (அரவிந்த்), 0163679638 (கணேஷ் குமார்) ஆகியோரை அழைக்கலாம்

 

spot_img

latest articles

explore more