சுங்கை பூலோ, மே 19-தாம் பிகேஆர் மத்திய செயலவைத் தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டுயிடுவதைத் தோல்வி அடைய வைக்க போலியான வீடியோ பதிவு தமது எதிரிகளால் வெளியிடப்பட்டு வருவதை சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் சாடியுள்ளார்.
ஈராண்டுகளுக்கு முன்னர் சிலாங்கூர் தேர்தலுக்குப் பின்னர், தமது உதவியாளர்களுக்கான சம்பளப் பணத்தை வழங்கிய வீடியோ பதிவானது திரிக்கப்பட்டு, அது தமது உதவித் தலைவர் தேர்தலுக்காக வழங்கப்பட்ட கையூட்டு என்று தமது எதிரிகள் வதந்தியைப் பரப்பி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த வீடியோ பதிவை வெளியிட்டது யார் என்பது தமக்குத் தெரியும் என்றும் அவர்கள் தமக்கு அவதூறு பரப்புவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டுமென்றும் ரமணன் கேட்டுக் கொண்டார்.


