Homeமலேசியாஆகஸ்ட் 1 முதல் மலேசியாவிற்கு 25% இறக்குமதி வரி! அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

ஆகஸ்ட் 1 முதல் மலேசியாவிற்கு 25% இறக்குமதி வரி! அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன், ஜூலை 8-

மலேசியா உள்ளிட்ட பல முக்கிய வர்த்தக நாடுகளுக்கு எதிராக 25 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்த புதிய வர்த்தக நடவடிக்கை, அமெரிக்காவின் முக்கிய வர்த்தக பங்காளிகளுக்கு எதிரான புதிய கட்டத்தம்தை தொடங்குகின்றது.

இந்த புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என டிரம்ப் அவரது ட்ரூத் சோஷியல் சமூகத்தளத்தில் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியுள்ளார்.

அந்த புதிய வரி விதிப்பு, மலேசியா, ஜப்பான், தென் கொரியா, கஜகஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பொருந்தும் என்றும், மற்ற நாடுகளுக்கு வெவ்வேறு விகிதங்களில் வரி விதிக்கப்படும் என்றாரவர்.

spot_img

latest articles

explore more