ஜோர்ஜ் டவுன்:

அமைச்சராக இருந்தபோது அமைதியாக இருந்துவிட்டு, இப்போது அதிகாரத்தில் இல்லாதபோது ‘பொட்காஸ்ட்’ வழியாகக் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்துவரும் முன்னாள் துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லி மீது பி.கே.ஆர் (PKR) தலைமைத்துவம் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பினாங்கு பி.கே.ஆர் உதவித் தலைவர் குமரேசன் ஆறுமுகம் வலியுறுத்தியுள்ளார்.

கட்சியையும் அரசாங்கத்தையும் விமர்சிப்பது ஓர் அரசியல் அச்சுறுத்தல் மற்றும் நயவஞ்சகமான செயல் என கூறிய அவர்,

ரஃபிஸி அவரது அலுவலகம் தொடர்பான ஆர்.எம் 1.12 பில்லியன் முதலீட்டு ஊழல் புகார் மீதான கவனத்தைத் திசைதிருப்பவே இவ்வாறு செயல்படுவதாகவும், கட்சியிலிருந்து விலக வேண்டும் என்றும் குமரேசன் கூறினார்.