Homeமலேசியாபங்சார் லக்கி கார்டனில் நாசி லெமாக் தூப்பாய் உணவகத்தை கைரி ஜமாலுடின் திறந்து வைத்தார் 

பங்சார் லக்கி கார்டனில் நாசி லெமாக் தூப்பாய் உணவகத்தை கைரி ஜமாலுடின் திறந்து வைத்தார் 

கோலாலம்பூர்:

பங்சார் லக்கி கார்டனில் இன்று நடைபெற்ற நாசி லெமாக் தூப்பாய் உணவகத்தின் திறப்பு விழாவில் முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டதுடன் உணவகத்தைத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலரும் திரளாகக் கலந்து கொண்டு உணவகத்திற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

உணவகத்தில் வழங்கப்பட்ட நாசி லெமாக்கைச் சுவைத்த கைரி, அதன் சுவையை வெகுவாகப் பாராட்டியதுடன், அதற்குச் சிறந்த மதிப்பீட்டையும் வழங்கினார்.

அவரது பாராட்டு உணவகத்தின் உணவுத் தரத்திற்குக் கிடைத்த அங்கீகாரமாக அமைந்தது.

இதனிடையே, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்மின் தலைவர் டத்தோ வீரா ஷாகுல், புதிய உணவகத்தைத் தொடங்கிய அதன் உரிமையாளருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மேலும், இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைத் தேடுவதுடன் மட்டும் நின்றுவிடாமல், சொந்தமாகத் தொழில் தொடங்கி வணிகத் துறையில் ஈடுபட முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொழில்முனைவில் இளைஞர்கள் ஆர்வம் காட்டி, தங்களுக்கான வாய்ப்புகளைத் தாங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் ஊக்குவித்தார்.

spot_img

latest articles

explore more