புடாபெஸ்ட், ஜூலை 31-
பார்மூலா ஓன் கார்பந்தயப் போட்டிகளின் வரிசையில் புடாபெஸ்டில் நடைபெற்ற போட்டியில் ஃபெராரி குழுவின் செபஸ்டியன் வெட்டல் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகுந்த பரபரப்புடன் நடைபெற்ற இப்போட்டியில் செபஸ்டியன் வெட்டல் முதலிடத்தைப் பிடித்த வேளையில் சக ஓட்டுநரான கிமி ரெய்கோனேன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
மெர்சிடிஸ் குழுவின் வல்டெரி போட்டாஸ் மூன்றாவது இடத்தை வென்றார். இந்த வெற்றியின் மூலம் ஓட்டுநருக்கான...