Homeமலேசியாரேபிஸ் நோயால் ஐந்தாவது நபர் பலி

ரேபிஸ் நோயால் ஐந்தாவது நபர் பலி

கூச்சிங், ஜூலை.24 – 

சரவாக்கில் ரேபிஸ்  எனப்படும் வெறிநாய்கடி தொற்று நோய்  ஐந்தாவது நபரைப் பலி கொண்டிருக்கிறது.

கம்போங் ரேமுனைச் சேர்ந்த 52 வயது டிண்டிங் லம்பாங்  ஞாயிற்றுக்கிழமை இரவு மணி 10.43க்கு சரவாக் பொது மருத்துவமனையில் அந்நோயால் இறந்தார் என சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

டிண்டிங்சையும் சேர்த்து இதுவரை ஐவர் வெறிநாய்க்கடி நோய்க்குப் பலியாகியுள்ளதாக நூர் ஹிஷாம் தெரிவித்தார். எல்லாருமே சரவாக்கின் செரியான் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

“புதிதாக யாருக்கும் அந்நோய் கண்டிருப்பதாகத் தெரியவில்லை”, என்றாரவர்.

டிண்டிங்ஸ் மே மாதத் தொடக்கத்தில் ஒரு நாயால் கடிக்கப்பட்டார். ஜூலை 11-இல் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

spot_img

latest articles

explore more