Homeமலேசியாகழுத்து அறுக்கப்பட்டு இந்தியப் பெண் கொலை -சிரம்பானில் சம்பவம்

கழுத்து அறுக்கப்பட்டு இந்தியப் பெண் கொலை -சிரம்பானில் சம்பவம்

சிரம்பான், அக். 2
தாமான் சிரம்பான் ஜெயாவில் இந்தியப் பெண்ணை தொடர்ந்து வீட்டிற்குள் புகுந்த கொள்ளையன் அப்பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 1.00 மணியளவில் நிகழ்ந்துள்ளது. வீட்டில் புகுந்த கொள்ளையன் பணத்தையும் கைத்தொலைப்பேசியையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

கொலை செய்யப்பட்டவர் திருமதி கே.குணவதிக்கு (வயது 39) 3 பிள்ளைகள் உள்ளன. வெளியில் சென்று வந்த குணவதி தனது காரை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்தபோது அவரை பின் தொடர்ந்த கொள்ளையன் வீட்டிற்குள் புகுந்திருக்கின்றான். பின்னர் குணவதியை தாக்கி அவருடைய கழுத்தை அறுத்தவன் பணத்தையும் கைப்பேசியையும் திருடிச் சென்றுள்ளதாக குணவதியின் சகோதரி தெரிவித்தார்.

முன்னதாக காலையில் ஒருவன் மோட்டார் சைக்கிளில் அந்த குடியிருப்பில் நடமாடியதாக தெரிய வருகிறது. பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிய குணவதியின் பிள்ளைகள் தங்கள் தாயார் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு கதறி அழுதிருக்கின்றனர்.

போலீசார் குணவதியின் உடலை சவப்பரிசோதனைக்காக சிரம்பான் துவாங்கு ஜாபார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த கொள்ளைச் சம்பவம் பக்கத்து வீட்டிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கிறது. இச்சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

latest articles

explore more