Homeமலேசியாடத்தின்ஸ்ரீ ரோஸ்மா வெ.2 மில்லியன் ஜாமீனில் விடுவிப்பு

டத்தின்ஸ்ரீ ரோஸ்மா வெ.2 மில்லியன் ஜாமீனில் விடுவிப்பு

கோலாலம்பூர், அக் 4
பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் வெ.2 மில்லியன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

ரோஸ்மா மீது 17 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றன. அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து அவர் விசாரணை கோரினார். முன்னதாக செஷன் நீதிமன்றம் வெ.10 மில்லியன் ஜாமீன் தொகையை நிர்ணயித்திருந்தது. ரோஸ்மாவின் வழக்கறிஞர்கள் வாதாடியதை தொடர்ந்து ஜாமீன் தொகை வெ.2 மில்லியனாக குறைக்கப்பட்டது.

இதனிடையே, ரோஸ்மா மீதான வழக்கு விசாரணை அடுத்த மாதம் 8ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதுவரை அவரது அனைத்துலக கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு தரப்பு வழக்கறிஞராக டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டிருக்கிறார். ரோஸ்மா தரப்பில் டத்தோ கீதன்ராம் மற்றும் டத்தோ குமரேந்திரன் ஆகியோர் வாதாடுகின்றனர்.

spot_img

latest articles

explore more