Homeமலேசியாநஜீப்புடனான மோதலால் எனது மூளை சுறு சுறுப்பாக இயங்குகிறது -துன் மகாதீர்

நஜீப்புடனான மோதலால் எனது மூளை சுறு சுறுப்பாக இயங்குகிறது -துன் மகாதீர்

கோலாலம்பூர், அக். 6
முன்னாள் பிரதமரான டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கோடு மோதல் இருப்பதால் வயதான காலத்திலும் தமது மூளை சுறு சுறுப்பாக இயங்கி வருவதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்துள்ளார்.

மூத்த குடிமக்கள் எப்போதும் தூங்கிக் கொண்டு இருக்காமல் புத்தகங்களைப் படித்தும், எழுதவும் அல்லது மற்றவர்களோடு தகராறு செய்து கொண்டிருக்கவும் வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

அக்டோபர் 1ஆம் தேதி அனுசரிக்கப்பட்ட அனைத்துலக முதியோர் தினத்தை முன்னிட்டு, இன்று நடைபெற்ற முதியோர் கருத்தரங்கில் கலந்து கொண்டபோது தமதுரையில் மகாதீர் இவ்வாறு தெரிவித்தார்.

தாம் பதவி ஓய்வு பெற்ற பிறகு பலரும் தம்மைக் காண வந்ததாகவும், தமக்கு முன்பிருந்த பிரதமரின் செயல்பாட்டில் அவர்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர்.

நஜீப்பிற்கு தாம் ஆலோசனை வழங்கியதாகவும் ஆனால், அதனை அவர் செவிசாய்க்கவில்லை என்றும் தம்மிடம் பேசிய பலரும் அதற்கு எதையாவது செய்ய வேண்டுமென தம்மைக் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more