Homeமலேசியாநஜிப்புக்கும் ரோஸ்மாவுக்கும் வழங்கிய உயரிய விருதுகளை மீட்டுக் கொண்டது நெகிரி அரண்மனை!

நஜிப்புக்கும் ரோஸ்மாவுக்கும் வழங்கிய உயரிய விருதுகளை மீட்டுக் கொண்டது நெகிரி அரண்மனை!

கோலாலம்பூர், அக்.26-

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் அவரின் துணைவியார் டத்தின் ஶ்ரீ ரோஸ்மா மான்சோருக்கு வழங்கப்பட்ட உயரிய விருந்துகளை நெகிரி செம்பிலான் அரண்மனை உடனடியாக மீட்டுக் கொண்டது. நஜிப்புக்கு டத்தோ ஶ்ரீ உத்தாமா பட்டத்தை வழங்கிய டர்ஜா ஶ்ரீ உத்தாமா நெகிரி செம்பிலான் மற்றும் ரோஸ்மாவுக்கு டத்தோ ஶ்ரீ பட்டத்தை வழங்கிய டர்ஜா ஶ்ரீ படுக்கா துவாங்கு ஜபார் யாங் அமாட் தெர்பூஜி விருதுகளும் மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தில் நடந்த நிதி முறைக்கேடுகள் தொடர்பில் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக், மற்றும் அவரின் துணைவியார் டத்தின் ஶ்ரீ ரோஸ்மா மன்சோர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வேளையில் இந்த உயரிய விருதுகள் மீட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

 

spot_img

latest articles

explore more