Homeகுற்றவியல்முகமட் அடிப்பின் மரணத்தை இன விவகாரமாக்காதீர்

முகமட் அடிப்பின் மரணத்தை இன விவகாரமாக்காதீர்

கோலாலம்பூர், டிச.18
தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் மரணத்தை இன விவகாரத்துடன் தொடர்பு படுத்தவேண்டாம் என தேசிய போலீஸ் படையின் துணைத் தலைவர் டான்ஸ்ரீ நூர் ரஷீட் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.

சீபில்ட் ஆலய கலவரத்தில் முகமட் அடிப் மரணமடைந்தது குற்றச்செயலாகும். இச்சம்பவம் தொடர்பில் போலீஸ் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று அவர் கூறினார்.

எனவே, இதனை இனப் பிரச்னையாக்க வேண்டாம் என அவர் சொன்னார். இது ஒரு குற்றச் செயல். போலீஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது என அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

இன, சமய பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளில் பொதுமக்கள் ஈடுபடக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more