spot_img
10.1 C
London
spot_img
Home மலேசியா கல்வி சிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்

சிந்தனை ஆற்றலை மேம்படுத்த ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ‘சிகரம்’ தன்முனைப்பு முகாம்

0
412

கோலாலம்பூர், பிப் 16-

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் யூபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு சிகரம் எனும் தலைப்பில் தன்முனைப்பு முகாம் நடத்தப்பட்டது.

சுமார் 75 மாணவர்களுக்காக நடத்தப்பட்ட இந்த முகாமில் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

இந்த முகாம் குறித்த பிரிக்பில்ட்ஸ் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் தர்மராஜ் முனுசாமி  கூறுகையில், யூபிஎஸ்ஆர் தேர்வுக்கு இன்னும் 200 நாட்களே இருக்கும் வேளையில், மாணவர்கள் தேர்வுக்கு எவ்வாறு தங்களை தயார்ப்படுத்தி கொள்ள வேண்டும், சிந்தனை திறனை மேம்படுத்துவதற்கும் முகாம் நடத்தப்பட்டது என அவர் கூறினார்.

பண்பாடு, நல்ல பழக்க வழக்கம், பெற்றோரை மதிப்பது போன்றவற்றிக்கு இந்த முகாமில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்று இன்று பெட்டாலிங் ஜெயா ஸ்ரீ முருகன் கல்வி நிலைய ஆசிரமத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த பெற்றோருக்கு மாணவர்களுக்கும் இடையே கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இரு தரப்பினரும் எதிர்நோக்கும் பிரச்னைகளும் அவற்றை எவ்வாறு தீர்வு காண்பது என்பது பற்றியும் இந்த முகாமில் கலந்துரையாடப்பட்டது என்று அவர் கூறினார்.

மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் இது போன்ற முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இந்ந முகாமில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தலைவர் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தோற்றுநர் டான்ஸ்ரீ டத்தோ எம்.தம்பிராஜா, சுரேந்திரன் கந்தசாமி, ஆகியோர் கலந்து கொண்டனர்.