Homeசமூகம்மலேசிய இந்து சங்கம் கோலக்கங்சார் வட்டாரப் பேரவையின் 37ஆம் ஆண்டு கூட்டம்; யூபிஎஸ்ஆர்,எஸ்டிபிஎம் மாணவர்களுக்கு...

மலேசிய இந்து சங்கம் கோலக்கங்சார் வட்டாரப் பேரவையின் 37ஆம் ஆண்டு கூட்டம்; யூபிஎஸ்ஆர்,எஸ்டிபிஎம் மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி

கோலக்கங்சார்,பிப் 19-

மலேசிய இந்து சங்கம் கோலக்கங்சார் வட்டாரப் பேரவையின் 37ஆம் ஆண்டு பொது கூட்டம் கடந்த  ஞாயிற்றுக்கிழமை கோலக்கங்சார் காந்தி நினைவு தமிழ்பள்ளி மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் மலேசிய இந்து சங்கம் பேராக் மாநில தலைவர் விவேக நாயகன் பொன்.சந்திரன் சிறப்பு வருகை புரிந்து நிகழ்வை வழிநடத்தினார். உடன் மலேசிய இந்து சங்கம் மாநில பேரவையின் துணைப்பொருளாளர் திரு.வாசுதேவன் கோபால் மற்றும் மகளிர் செயலாளினி திருமதி.பரமேஸ்வரி சுப்பையா கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திரு.தயாளன் முனுசாமி மீண்டும் மலேசிய இந்து சங்கம் கோலக்கங்சார் வட்டாரப் பேரவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இக்கூட்டத்தில்  யூபிஎஸ்ஆர் மற்றும் எஸ்டிபிஎம் தேர்வில் மிகச் சிறப்பாக தேர்ச்சி பெற்ற 5 மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கப் பட்டது. மேலும் கடந்த ஆண்டு நிர்வாக உறுப்பினர்கள் அனைவருக்கும், அவர்களின் சேவையை பாராட்டி  நற்சான்றிதழ் வழங்கபட்டது.

இவ்வட்டாரம் தற்பொழுது கூட்டுப் பிரார்த்தனை, சக்தி யுகம், மருத்துவமனை நோயாளிகள் பிரார்த்தனை, அட்சய பாத்திரம், சமய வகுப்புகள் என பல சமூகவியல் நடவடிக்கைகள் மூலம் தனது சிறப்பான சேவையை செய்துக் கொண்டு வருகின்றது. இச்சேவை மேலும் தொடரப்பட்டு நமது இந்து சமயம் தலைத்தோங்க செய்ய வேண்டும் என மாநில தலைவர் தமது உரையில் கேட்டுக் கொண்டார்.

spot_img

latest articles

explore more