கோலாலம்பூர், ஆக. 25-
காப்பாரிலுள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தின் முருகன் சிலை திறப்பு விழாவில் கலந்துக்கொண்டு பி.கே.ஆரின் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பற்றி அவதூறாக பேசியதாக கூறி பி.கே.ஆரின் மெலாவாத்தி சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கவாசகத்தை அக்கட்சி 2 ஆண்டுகளுக்கு அடிப்படை உறுப்பினர் தகுதி நீக்கம் செய்தது.
பி.கே.ஆரின் பொதுச்செயலாலர் டத்தோ சைபுடின் நசூடின் இஸ்மாயில் இந்த உறுப்பினர் தகுதி நீக்க கடிதத்தை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
கடந்த பொதுத்தேர்தலில் ஓம்ஸ் தியாகராஜன் தனது உறுவினரான இந்நாள் காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர் மணிவண்ணனை அத்தொகுதியில் வேட்பாளராக நிறுத்துவதற்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு 3 லட்சம் வெள்ளி முதல் 4 லட்சம் வெள்ளி வரையில் தொகையை வழங்கியதாக சம்பந்தப்பட்ட ஆலயத்தில் மாணிக்கவாசகம் கூறியதாக கூறி பி.கே.ஆர் அவரை இந்த தகுதி நீக்கம் செய்துள்ளது.
இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் கட்சியின் பெயரில் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என்றும் 14 நாட்களுக்குள் கட்சியின் தலைமைத்துவத்திடம் அவர் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



