கோலாலம்பூர், ஆக.26 –
2017 சீ விளையாட்டுப் போட்டியில் மகளிர்க்கான 3 மீட்டர் ஸ்பிரிங்போர்ட் பிரிவில் தேசிய முக்குளிப்பு வீராங்கனை வெண்டி எங் யான் யீ தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
தேசிய நீச்சல் அரங்கில் நடைபெற்ற போட்டியில் 342.90 புள்ளிகளை பெற்றதன் வழி மலேசியாவுக்கு முக்குளிப்பு போட்டியில் முதல் தங்கப் பதக்கத்தை யான் யீ உறுதிச் செய்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூரில் நடைபெற்ற சீ போட்டியில் எங் யான் யீ வெள்ளிப் பதக்கம் மட்டுமே வென்றார் என்பது குறிப்பிடதக்கது. இந்தப் போட்டியில் மற்றொரு நீச்சல் வீராங்கனையான நூர் டபித்தா சப்ரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அவர் 311.25 புள்ளிகளை மட்டுமே பெற்றார். சிங்கப்பூரின் ஆஷ்லி தான் யி சுவான் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.


