கோலாலம்பூர், ஆக.26-
2017 சீ விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான திடல் போலிங் இரட்டையர் பிரிவில் மலேசியா தங்கப் பதக்கம் வென்றது. இதன் மூலம் திடல் போலிங் போட்டியில் மலேசியா தனது நான்காவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.
மலேசியாவின் பைரூல் இஸ்வான் முயின் – ஹிஸ்லி அப்துல் ராயிஸ் ஜோடி, 20 -13 என்ற புள்ளிகளில் பிலிப்பைன்சின் மார்சேலித்தோ பன்சோ – மொராலேஸ் ஆங்கலோ இணையை வீழ்த்தியது.
இம்முறை நடைபெறும் சீ விளையாட்டுப் போட்டியில் நான்கு தங்கப் பதக்கங்களை வெல்ல மலேசிய திடல் போலிங் சங்கம் இலக்கு நிர்ணயித்திருந்தது.
தற்போது பைரூல் இஸ்வான் முயின் – ஹிஸ்லி அப்துல் ராயிஸ் ஜோடி பெற்றிருக்கும் வெற்றியின் வழி அந்த இலக்கு அடையப்பட்டுள்ளது.


