பீடோர் | பிப்பரவரி 26:-
31 ஆயிரத்து 958 பேர் கலந்து கொண்ட ‘கோ கிரீன்’ பசுமைப் புரட்சித் திட்டத்தில் பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி உலக சாதனை புத்தகத்திலும் ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 84 மாணவர்கள், 20 ஆசிரியர்கள், 2 பெ.ஆ.ச தலைவர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். கடந்த திசம்பர் 12ஆம் நாள் முதல் 24 ஆம் நாள் வரை இந்தத் திட்டம் நடத்தப்பட்டது.
இயற்கையை நேசிப்போம், அதனைப் பாதுகாப்போம் என்பதன் அவசியத்தை அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டு செல்லும் கடப்பாடு நமது அனைவருக்குமானது.
அதனை அறிமுகம் செய்து வைத்து விட்டு ஒதுங்குதல் முறையன்று. நடைமுறைப் படுத்துதலையும் கற்பித்து அதன்படியே தொடர்ந்து அடுத்தத் தலைமுறை செயல்பட வைக்கும் நோக்கில் இந்தத் திட்டத்தில் கலந்து கொண்டதாக அப்பள்ளியின் புறப்பாட நடவடிக்கை துணைத் தலைமையாசிரியர் திரு குமரன் தெரிவித்தார்.

மேலும், உலக சாதனை புத்தகத்தில் ஆசிய சாதனை புத்தகத்திலும் இடம்பெற இத்திட்டத்தை வெற்றி பெறச் செய்த அனைவருக்கும் நன்றியையும் அவர் தெரிவித்தார்.






