ஈப்போ | பிப்பரவரி 26:-
மார்க்கத்தால் இசுலாமியராக சந்திரக் கணக்குப்படி ஹிஜ்ரி ஆண்டைக் கடைபிடித்தாலும், தாய்மொழியால் தமிழன் எனும்போது என் இனத்துக்கானத் தொடர் ஆண்டான திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கை வரவேற்கிறேன்.
தைத்திங்கள் முதல் நாளான தமிழ்ப்புத்தாண்டு என் இனத்தின் அடையாளம். அதில் எவ்வித ஐயமும் கிடையாது.
தமிழ் அறிஞர்களால் ஆய்வு செய்து நம் தமிழ் இனத்துக்குச் சரியானத் தொடர் ஆண்டு வேண்டும் எனும் நோக்கில் 1921 ஆம் ஆண்டு உருவாக்கி, இன்றைய 2021ஆம் ஆண்டில் 2052 எனும் எண்ணிக்கையில் பயணித்துக் கொண்டு இருக்கிறோம்.
மலேசியாவின் அனைத்து நாளிதழ்களிலுமே இதனைக் கண்கூடகப் பார்க்கும் போது இதனை சம்பத்தப்பட்டவர் கவனிக்க வில்லையா எனத் தெரிவியவில்லை.
கடந்த 2017ஆம் ஆண்டு 7 அமைப்புகளுடன் கூட்டாகச் சேர்ந்து சித்திரை முதல் நாளை இந்துப் புத்தாண்டு என அப்போதைய அரசாங்கத்திடம் மனுவைக் கொடுத்தீர்கள்.
இவ்விவகாரத்தைக் கண்டதும்,பெரும் பிரச்னையாக இருந்துவந்த ஒரு விவகாரம் சுமுகமாக தீர்வு காணப்பட்டதில் நான் மட்டுமல்ல தமிழ் சமுதாயமே மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. இனம் வேறு மதம் வேறு என்பதில் மிகத் தெளிவான நிலையில் தாங்கள் இருப்பதோடு மிகச் சரியான முன்னெடுப்பைச் செய்தீர்கள்.
அதற்கு முன்னர் ஏற்பட்டுள்ள பல குழப்பங்களுக்கு அந்த நடவடிக்கை தீர்வாக அமைந்ததால் வரவேற்கத்தக்க ஒன்றாகப் பார்க்கப்பட்டது.
சமய, மத, நெறி கடந்து தாய்மொழியால் தமிழர் எனும் அடிப்படையில் தை முதல் நாளைத் தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடக் கூடிய தெளிவை அது கொடுத்தது.
ஆனால், இன்று (25-2-2021) மோகன் ஷான் வெளியிட்ட பத்திரிகைச் செய்தியில் குழப்பத்தையும் பல சமயங்கள் கொண்ட தமிழ் இனத்தையும் பிளவு படுத்துவதாக இருந்தது பெரும் வேதனைக்குரியது.
2017ஆம் ஆண்டு ஒரு விதமான முன்னெடுப்பைச் செய்து விட்டு இன்று மோகன் ஷான் வெளியிடும் செய்தி யாரை ஏமாற்றும் வேலை ?
மோகன் ஷான் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறாரா ?
அல்லது மற்ற மதத்தைத் தழுவியிருக்கக் கூடிய தமிழர்களை ஏமாற்றுகிறாரா ?
அல்லது தமிழ் இந்துக்களை ஏமாற்றப் பார்க்கிறாரா ?
சித்திரை முதல் நாளை இந்துப் புத்தாண்டாக மோகன் ஷான் கொண்டாடுவதே சிறப்பு, அது வரவேற்கத்தக்க ஒன்று.
நாம் அனைவரும் சேர்ந்து தாய்மொழியால் தமிழர்களாக இனம் சார்ந்து தைத்திங்கள் முதல் நாளை தமிழ்புத்தாண்டாகக் கொண்டாடுவதே நனிநன்று.
இந்தப் புரிதல் இருந்தால் அனைவருக்கும் நன்று.
நன்றி! வாழ்க தமிழ்!
ஹாஜி பி.எஸ்.எம். சாகுல் ஹமீது முஸ்தபா. ஈப்போ.
0174438644


