சேது திரைப்படத்தின் மூலம் திரைவானின் உச்சத்திற்கு போன நடிகர் விக்ரம் பிறகு காசி, பிதாமகன், அந்நியன், தெய்வத்திருமகள் என தமது பரிட்சார்த்த முயற்சிகள் மூலம் தன் திறமையை நிரூபணம் செய்தார். அதன் வெற்றியே சீயானை தூள், ஜெமினி, சாமி என அவரை பக்கா கமர்சியல் ஹீரோவா உருவாக்கியது.
இவரைபோலவே, நந்தா, காக்கா காக்க, பேரழகன், கஜினி, வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு என்று ரிஸ்க் கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பில் தூள் கிளப்பிய சூர்யா.. ஆறு, வேல், அயன், சிங்கம் என்று ஜாலி கமர்சியல் படங்களைக் கொடுத்து வசூல் ஹீரோவாகவும் முன்னேறினார். இந்த இருவரின் பாதை வேறு என்றாலும் சென்று சேறும் இடம் கமலின் நாற்காலிட்யாகவே இருக்கிறது. இதில் யார் அடுத்த கமல் என்ற போட்டி அவர்களின் ரசிகர்களை தொடர்ந்து உசுப்பிவிடுகிறது.
இந்நிலையில், இந்த நாற்காலி சண்டை தற்போது வலுத்திருக்கிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூரியா நடிப்பில் ”தானா சேர்ந்த கூட்டம்” பொங்கல் ரிலீஸ் என்று அறிவித்தார்கள். இதன் அறிவிப்பு வெளிவந்த சில மணி நேரத்தில் விக்ரம் நடித்துக்கொண்டிருக்கும் ‘ஸ்கெட்ச்” திரைபடத்தையும் அதே பொங்கல் நாளில் அடுத்த ஆண்டு வெளியீடு செய்ய அந்த தரப்பு அறிவித்துள்ளது.
இந்த நேரடி போட்டியில், விகரம் சூர்யா நிச்சயம் ஹிட் கொடுத்தாக வேண்டும் என்ற நிலை வந்த்துள்ளது. கமலே நாற்காலிக்கு நிற்கும் வேளையில் அவர் நாற்காலிக்கு போட்டியாக சூர்யாவும் விகரமும் முரண்டு பிடித்துக்கொண்டு இருக்கின்றனர்.


