கோலாலம்பூர், செப்.20-
இரத்த அழுத்தம் பலவீனமாக இருப்பதாக கோலாலம்பூர் பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எதிர்கட்சி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தற்போது நலமாக இருப்பதாக அவரது மகளும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இசா தெரிவித்தார்.
நேற்று மாலை மணி 2.00 அளவில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட போது நூருல் இசா அவரை பார்க்க வந்ததோடு அங்கேயே இருந்துள்ளார்.
இந்நிலையில் தனது தந்தையின் உடல்நிலை குறித்து அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.



