பட்டர்வொர்த், மே 13-பினாங்கு இந்து அறவாரியத்திற்கு தங்கப் பட்டைகளை வாங்கிய ஊழல் வழக்கில் பினாங்கின் முன்னாள் துணை முதல்வர் டாக்டர் ராமசாமி மீது பட்டர்வொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும் என அவரின் வழக்கறிஞர் சாம்ஷெர் சிங் திண்ட் தெரிவித்தார்.
2010லிருந்து 2023ஆம் ஆண்டு வரை பினாங்கு இந்து அறவாரியத்தின் தலைவராக இருந்த ராமசாமி, 8 லட்சம் ரிங்கிட் பெறுமான தங்கப் பட்டைகளை வாங்கியதில் முறைகேடு செய்திருப்பதாக அவர் மீது குற்றம் சாட்டப்படலாம் என நம்பப்படுகிறது.
இந்தக் குற்றச்சாட்டானது தமக்கு எதிரான அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.


