Homeசமூகம்பண மோசடி விவகாரத்தில் போலீஸார் மெத்தன போக்கு!

பண மோசடி விவகாரத்தில் போலீஸார் மெத்தன போக்கு!

கோலாலம்பூர், மே 16-நாட்டில் தற்போது வங்கிக் கணக்கில் இருந்து வாடிக்கையாளர்களின் பணம் மற்றவர்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்றம் செய்யும் நடவடிக்கை அதிகரித்துள்ள தாகவும் அதில் போலீஸாரின் மெத்தனத்தினால் பலர் தங்களது சேமிப்பை இழந்து வாடுவதாகவும் பிஎஸ்எம் தலைவர் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் தேவராஜ் குற்றம் சாட்டினார்.

இந்த மோசடியைத் தடுத்து நிறுத்த போலீஸாரிடம் புகார் தெரிவித்த பின்னர், போலீஸாரின் உத்தரவிற்குப் பின்னரே வங்கிகள் பணம் மாற்றப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்.

இந்த நடவடிக்கையின் கால தாமதத்தினால் பல வாடிக்கையாளர்கள் தங்களின் வாழ்நாள் சேமிப்பை இழந்து சோகத்தில் வாடுவதைத் தடுக்க போலீஸாரும் வங்கிகளும் ஒருங்கிணைந்து வாடிக்கையாளர்களின் புகார்களுக்கு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மைக்கல் ஜெயகுமார் கேட்டுக் கொண்டார்.

 

spot_img

latest articles

explore more