Homeசமூகம்முஸ்லிமாக மாறியவர் சொந்த மதத்திற்குத் திரும்ப முடியாது

முஸ்லிமாக மாறியவர் சொந்த மதத்திற்குத் திரும்ப முடியாது

கோலாலம்பூர், மே 16-முஸ்லிமாக மாறிய ஒருவர் தமது தாய் மதமான கிறிஸ்துவ மதத்திற்குத் திரும்ப முடியாது என்று மேல் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2010ஆம் ஆண்டு 47 வயது கிறிஸ்துவர் ஆடவர் இஸ்லாமிய பெண்ணை திருமணம் முடிக்க மதம் மாறியுள்ளார். ஆயினும், 5 ஆண்டுகளுக்குப் பின்னர், அந்தப் பெண்ணை விவாகரத்து செய்த பின்னர், தமது தாய் மதத்திற்கு மாற விண்ணப்பம் செய்திருந்தார்.

எனினும், அவரின் மனுவை விசாரித்த மேல் முறையீட்டு நீதிமன்றம் அந்த விவகாரத்தில் ஷரியா நீதிமன்றமே முடிவெடுக்க அதிகாரம் பெற்றிருப்பதாகவும் சிவில் நீதிமன்றங்கள் அதில் தலையிட முடியாது என்று கூறியதோடு, ஷரியா மேல் முறையீட்டு நீதிமன்றம் அவரின் மதமாற்ற மனுவை ஏற்கெனவே தள்ளுபடி செய்திருப்பதால், சம்பந்தப்பட்ட நபர் தமது தாய் மதத்திற்கு திரும்ப முடியாது என்று தீர்ப்பளித்தது.

spot_img

latest articles

explore more