Homeஅரசியல்அமைச்சரவையிலிருந்து வெளியேற விரும்புவோர் தாராளமாக வெளியேறலாம்! பிரதமர் அன்வார்

அமைச்சரவையிலிருந்து வெளியேற விரும்புவோர் தாராளமாக வெளியேறலாம்! பிரதமர் அன்வார்

புத்ரா ஜெயா, மே 22-அமைச்சரவையிலிருந்து வெளியேற விரும்பும் தலைவர்கள் தங்கள் விருப்பம் போல் வெளியேறலாம் என்று பிரதமரும் கெஅடிலான் கட்சித் தலைவருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம்  தெரிவித்தார்.

கெஅடிலான் தேர்தலுக்குப் பிறகு அமைச்சரவையில் எந்த மாற்றமும் நிகழாது என்று அன்வார் உறுதியளித்தார்.

எனினும், அதன் பிறகு பதவி விலக விரும்பும் எந்தத் தலைவரையும் தான் தடுக்கப் போவதில்லை என்றார்.

கட்சித் தேர்தல் நெருங்கிய நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் இடையேயான போட்டி. ஆகையால், அமைச்சரவை உறுப்பினர்களில் எந்த மாற்றத்தையும் செய்ய விரும்பவில்லை.

இது நெருங்கிய நண்பர்கள், சக பணியாளர்களுக்கு இடையிலான போட்டி. இதனால் அமைச்சரவையை மாற்றியமைப்பது என்ற பிரச்சினைக்கு  இடமில்லை.

தேர்தலில் தோல்வியடைந்தால் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்ற லட்சியம் கொண்ட எவரையும் தன்னால் தடுக்க முடியாது என்றார் பிரதமர்.

புத்ராஜெயா, ஸ்ரீ பெர்டானா வளாகத்தில் உள்ளூர், அனைத்துலக ஊடகங்களின் தலைமை ஆசிரியர்களுடனான பிரதமரின் விளக்கமளிப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

spot_img

latest articles

explore more