Homeகலை உலகம்சங்கீத பரத கலாஞ்சலி நடனப்பள்ளியின் சலங்கை பூஜை

சங்கீத பரத கலாஞ்சலி நடனப்பள்ளியின் சலங்கை பூஜை

தஞ்சோங் ரம்புத்தான், மே 23- பேரா,தஞ்சோங் ரம்புத்தான் வட்டாத்தில் சுமார் 30 வருங்களாக  இயங்கி வரும் சங்கீத பரத கலாஞ்சலி நடனப்பள்ளி மாணவர்களின் சலங்கை பூஜை சிறப்பாக நடைபெற்றது.

ஏழு மாணவிகள் பங்கேற்ற இந்த பரத நாட்டிய சலங்கை பூஜை நிகழ்ச்சி  தஞ்சோங் ரம்புத்தான் தேவா ஸ்ரீ முருகன் கோவில் மண்டபத்தில் நடைபெற்றது.

இப்பள்ள நடன ஆசிரியை குரு ஸ்ரீமதி உஷா நந்தினி தலைமையில் இப்பள்ளிி  சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

நர்மதா குணசீலன்,ஹாசிகா ஜெகன்மோகன்,சாய் கிஷாந்ரா பிரேம் நாதன்,பூவாசினி கைலாசம்,ஜெயமலர் சசிராவ்,கீர்தனா விஜய்,ரெயஷெனி சன்னாசி ஆகியோர் சலங்கை பூஜை கண்டதாக நடன ஆசிரியை குரு ஸ்ரீமதி உஷா நந்தினி கூறினார்.

கடந்த 30 வருடமாக செயல்பட்டு வரும் இப்பள்ளியில் நடனம் பயின்ற மாணவிகளில்  17க்கும் மேற்பட்டோர்  அரங்கேற்றம் கண்டதோடு 30க்கு மேற்பட்டோர் சலங்கை பூஜையை முடித்திருப்பதாக அவர் விவரித்தார்.

இந்த சலங்கை பூஜை நிகழ்ச்சியில்   மாணவிகளின் பெற்றோர்கள்,உறவினர்கள், சுற்று வட்டார மக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

spot_img

latest articles

explore more